News
First on SimpliCity: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ முற்றிலும் அணைப்பு - மாநகராட்சி ஆணையர் தகவல்
SimpliCity News Team · 05 Mar 2021
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகள் எரிந்ததால் புகை மூட்டத்துடன் காணப்பட்டு மூச்சு விட முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். இதனிடையே வெள்ளலூர் குப்பைகிடங்கில் ஏற்பட்ட தீ முற்றிலும் அனைக்கப்பட்டுவிட்டது, என மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.
கோவை வெள்ளலூர் குப்பைகிடங்கு 650 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் குப்பைகளும் இங்குதான் சேமிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. தினமும் சுமார் 900 முதல் 1000 டன் குப்பைகள் இங்கு குவிக்கப்படுகின்றன. வெயிலின் தாக்கத்தால் இந்த குப்பை கிடங்கில் குப்பைகளில் இருந்து உருவாகும் மீதேன் வாயு காரணமாக அடிக்கடி தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதனிடையே, நேற்று மதியம் வெள்ளலூர் குப்பைகிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டு அருகில் வசிக்கும் போத்தனூர், அன்புநகர், செட்டிபாளையம் பை பாஸ் சாலை பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூச்சு திணறளில் அவதியடைந்தனர்.வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். 4 தீயனைப்பு வாகனங்கள் தீயனைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ ஏற்று மாலை 5 மணி அளவில் முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது, என்று மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.